[காணொளி இணைப்பு] சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட 25 பேர் கைது

22

தமிழக மீனவர்களை சிங்கள இனவெறி கடற்படை சுட்டுக்கொல்வதை கண்டிக்காத கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் சென்னை அலுவலகமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்ட மே 17 இயக்க திருமுருகன், ஊடகவியலாளர் அய்யநாதன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர் ஜெயகுமாரின் படுகொலையை கண்டித்து சென்னையில் சத்தியமூர்த்திபவன் முன் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. தமிழின பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த க.அய்யநாதன், மே பதினேழு இயக்க சேர்ந்த திருமுருகன், ஓவியர் சந்தானம்  உள்ளிட்ட பல தமிழுணர்வாளர்கள் கலந்துகொண்டனர். மீனவர் படுகொலைக்கு காரணம் காங்கிரஸ் அரசாங்கமே என்பதை வலியுறுத்தியும், இதன் பின்னணியில் உள்ள பிரணாப் முகர்ஜி, எல்.கே.அந்தோணி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்டோர் பதவிவிலககொரியும் இந்த போராட்டம் நடைபெற்றது. முடிவில் போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களை காவல்துறை கைதுசெய்தது