ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

38

ஊதிப்பெருக்கும் விலைவாசி உயர்வு, மற்றும் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

இடம் :   வேதவள்ளியம்மாள் திருமண மண்டபம், நேரு வீதி, திண்டிவனம்

நாள் : 22.01.2011 சனிகிழமை மாலை 3.00 மணி அளவில்

தலைமை : தமிழர் திரு. மா.செ.குமரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

முன்னிலை : தமிழர் திரு. ராமலிங்கம் ஆசாரியர்.

வரவேற்புரை : தமிழர் திரு. அசோக்குமார்.

சிறப்புரை : பெருந்தமிழர் பேராசிரியர் தீரன், திருமதி அமுதா நம்பி, தமிழர் திரு.அன்பு தென்னரசன் அவர்கள்

சிறப்பு அழைப்பாளர்கள் : தமிழர்கள் : திரு. சி.அருண் சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.  செழியன் புதுவை மாநல ஒருங்கிணைப்பாளர்.
தீபன் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.   லோ. துரைராசு காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர். பிரபாகரன் திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

தமிழர்களே! ஊழல் ஒரு புறம் புரையோடிக் கொண்டிருக்க அதனை தொடர்ந்தே விலைவாசி உயர்வும் விண்ணைமுட்டும் அளவிற்க்கு ஊதிப் பெருத்து கொண்டிருக்கிறது.  இன்றைக்கு விலைவாசி உயர்வு என்பது அனைத்து தரப்பு மக்களையும் புரட்டி எடுத்து கொண்டிருக்கிறது.  சமையலுக்கு தேவையான பருப்பு முதல் வெங்காயம் வரை தினம் ஒரு விலையாக எகிரி கொண்டிருக்கிறது.  அதனை கட்டுப்படுத்தக்கோரி ஆட்சியாளர்களை கேட்டால் மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்திருக்கிறது என்று வாதம் பேசுகிறார்கள்.

மாதம் இருமுறை ஏறும் பெட்ரோல் விலை ஒருபுறம் இருக்க மக்கள் வீதிக்கு வந்து தினம் தினம் போராடினாலும் மக்களுக்கான அரசு மவுனம் காக்கிறது.  இதன் சூட்சமம் என்ன? இந்த அரசுகள் மக்களுக்கா? அல்லது பெரும் முதலாளிகளுக்கா? என்ற கேள்வி எழாமல் இல்லை. ஈழத்திலே இன அழிப்பு நிடந்த போது நாம் கூக்குரல் போட்டோம்? போரை நறுத்துங்கள் என்று அதற்கு நிம்முடைய மாநல அரசானது நாங்கள் முடிந்த வரை கேட்டுவிட்டோம் இனி எங்களால் செய்வதற்க்கு ஒன்றும் இல்லை என்று கைவிரித்து விட்டது.  மத்திய அரசோ தொடர்ந்து கண்டும் காணதது போல மவுனம் சாதித்துவிட்டது. எனவே இனியும் நாம் இவர்களிடத்தில் ஆட்சி அதிகாரத்தை  தாரைவார்க்க முடியாது.  இழக்க இனி ஒன்றும் இல்லை. வாருங்கள் எம்  இன உறவுகளே கலந்துரையாடுவோம்.  கூறுங்கள் கட்சி வளர்ச்சி பணிகள் பற்றிய தங்களுடைய நில்யோசனைகளை. உதவாதினி ஒரு கண தாமதம். ஒன்றினைவோம்! வென்றெடுப்போம்! நிம் உரிமைகளை நாம் தமிழராய்

தொடர்புக்கு அலைபேசி எண்: மா.செ.குமரேசன்: 9840 962933, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம்


முந்தைய செய்திகள் இறக்கும் போராட்டத்திற்கு ஆதரவு – சீமான்
அடுத்த செய்திராஜபக்சே நாள்காட்டி எரிப்பு -200 பேர் கைது