சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, செல்வபாரதி,கோட்டை குமார் , இயக்குநர் வேலு பிரபாகரன்,வழக்கறிஞர் கயல்விழி, ரேவதி நாகராசன்,பேராசிரியர் ராமசாமி,தலைமை நிலைய செயலாளர் தடா,ராசா,வழக்கறிஞர் ராசீவ் காந்தி,அன்புத்தென்னரசு,அதியமான்,அமுதாநம்பி,தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
செந்தமிழன் சீமான் அவர்கள் மீது போடப்பட்ட பொய்யான தேசிய பாதுகாப்பு சட்டத்தை தகர்த்து ஐந்து மாத சிறை வாசத்திற்கு பிறகு செந்தமிழன் சீமான் அவர்கள் பங்குபெறும் முதல் பொதுக்கூட்டம் என்பதால் பொதுக்கூட்டம் நடந்த எம்,ஜி,ஆர் நகர் பகுதி முழுவதும் மாந்தமிழர் இனத்தின் மனித தலைகள் மட்டுமே காணப்பட்டது.பொதுக்கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை முழக்கம் மற்றும் கருப்புக்குரல் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பொதுகூட்ட மேடைக்கு சரியாக 7 மணிக்கு வந்த செந்தமிழன் சீமான் உறுதிமொழி கூற அதை நம் தமிழ் உறவுகள வழி மொழிந்தனர். தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் தங்கராசு வரவேற்புரை நிகழ்த்தினார் .தமிழ் முழக்கம் சாகுல் அமீது,வழக்கறிஞர் கயல்விழி, கோட்டை குமார்,இயக்குநர் வேலு பிரபாகரன், புகழேந்தி தங்கராசு,ரேவதி நாகராசன்,அமுதா நம்பி ஆகியோரை தொடர்ந்து பேச எழுந்த செந்தமிழன் சீமான் அவர்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எழுந்து கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
தனக்கே உரித்தான பாணியில் நம் தமிழின பகைவர்களை வெளுத்து வாங்கிய நம் செந்தமிழன்,தந்தை பெரியாரின் கருத்துக்களை பதிவு செய்யும் வண்ணம் பாடல்களை பாடி மக்களுக்கு உணர்ச்சியை ஏற்படுத்தினார். எம்.ஜி.ஆர். அவர்களை நினைவு கூறும் வகையில் தேசிய தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி சொன்ன சில செய்திகளை நம்மிடையே பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து நம் நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலை,நம் தேசத்தில் நடைபெற்ற ஊழல்,அரசியல் அடக்குமுறை ஆகிய குறைபாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பேச அனுமதி இல்லை என்று காவல் துறையினர் கேட்டுகொண்ட போது நம்முடைய தமிழ் சொந்தங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சீமான் அவர்கள் காவல் துறையினர் அவர்களுடைய கடமையை செய்கிறார்கள் என்று தொண்டர்களை சமாதானப்படுத்தி தனது பேச்சை நிறைவு செய்வதாக அறிவித்தார்.
இக்கூட்டத்திற்கு ஏராளமான நாம் தமிழர் கட்சியினர் ,தமிழின உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்க்கனக்கில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் மாற்றுத்திரனாளிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.தமிழ் தேவன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.