இலங்கை தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ள ராஜபக்சேவிற்கு எதிராக தமிழர்கள் போராட்டம்

22
ஆக்ஸ்போர்ட்டில் நிகழ்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரித்தானிய அரசில் உயர் மட்டங்களுடன் எப்படியாவது ஒரு புகைப்படமாவது எடுத்து தன்னுடைய கௌரவத்தை சிங்கள மக்கள்மத்தியில் காப்பற்றும் யோசனையில் இருந்த ராஜபக்சவுக்கு அவர் தங்கியிருந்த விடுதியின் அருகில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தால் பெரும் அச்சத்தை உண்டாக்கியது. இதனையடுத்து இலங்ககி தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

இதனை அறிந்த தமிழ் இளைஞர்கள் தூதரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதரகத்தினுள் உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர். அனைத்துப் பகுதிகளும் தமிழ் மக்களால் சுற்றி வளைக்கப்பட்டதால் விழி பிதுங்கிய காவல்துறையினர் தமிழர்களிடம் வந்து வணக்கம் நீங்கள் அனைவரும் சுகமா? இங்கு நீங்கள் பிரச்சனை எதுவும் ஏற்படுத்த மாட்டீர்கள் என நம்புகின்றோம் என கூறினார்கள்.

அதன்பின்பு சிங்கள மக்கள் யாருக்கும் நாம் எவ்விதத்திலும் தடங்கல் ஏற்படுத்த மாட்டோம். எங்களது நோக்கம் ராஜபக்சேவை முடக்குவதே எனவும் சிங்களவர்களை போக நாங்கள் அனுமதிப்போம் என உறுதியளித்த பின்னர் சிங்களவர்கள் காவல்துறையின் பாதுகாப்போடு தூதரகத்தில் இருந்து வெளியேறினார்கள். அனைத்து சிங்களவர்களும் வெயியேறிய பின்னர் மிகவும் பலத்த பாதுகாப்போடு மூடி வைக்கப்பட்டிருந்த தெருவொன்றில் இருந்து ராஜபக்சேவும் அவரது சகாக்களும் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.