திருவள்ளூர் மாவட்டம்

அம்பத்தூர் தொகுதி – திலீபன் நினைவு சுவரொட்டிகள் ஒட்டும் நிகழ்வு

25.9.2020 அன்று அம்பத்தூர் தொகுதி முழுமைக்கும் ஈகைப் பேரொளி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் வீரவணக்க சுவரொட்டி அம்பத்தூரில் அனைத்து வட்டங்களிலும் ஒட்டப்பட்டது.களத்தில் பணியாற்றிய அனைத்து வட்ட பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,

திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!

அவசர அறிவிப்பு: அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி...

கும்மிடிப்பூண்டி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா பெரியபுலியூர் ஊராட்சியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக எல்லாபுரம் ஒன்றியம் சார்பாக பெரியபுலியூர் ஊராட்சியில் திருகண்டலம் ஊராட்சியில் ஆகிய பகுதிகளில் பனைவிதை நடும் விழா நடைபெற்றது ...

கும்மிடிப்பூண்டி தொகுதி-உறுப்பினர் சேர்க்கை திருவிழா

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி தகவல்  தொழில்நுட்ப பாசறை சார்பாக 03-10-2020, சனிக்கிழமை அன்று  உறுப்பினர் சேர்க்கை திருவிழா திருகண்டலம் ஊராட்சியில் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி தொகுதி -கபசுரக் குடிநீர் வழங்குதல்

நாம் தமிழர் கட்சி கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியம் சார்பாக 04-10-2020, ஞாயிற்றுக்கிழமை எளாவூர் பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் 300-க்கும் மேற்பட்ட  இடங்களில் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. 

பொன்னேரி தொகுதி -பனை விதை நடும் விழா 

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மற்றும் பொன்னேரி தொகுதி சூற்றுச்சூழல் பாசறை சார்பாக 4:10:2020 அன்று பல்வேறு இடங்களில் பனை விதை நடும் விழா  நடைபெற்றது.

பொன்னேரி தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

04:10:2020 ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னேரி தொகுதி நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக உறுப்பினர் சேர்க்கை திருவிழா நான்கு பகுதிகளில் பழவேற்காடு, காட்டூர், மீஞ்சூர் நகரம் மற்றும் பொன்னேரி நகரத்தில் நடைபெற்றது...