திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!

71

அவசர அறிவிப்பு:

அன்பின் உறவுகளுக்கு!
வணக்கம்.
நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்து பெரும் வேதனையடைந்தேன்.
தமிழர் உரிமை, தமிழர் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்த பெருந்தகை, தற்போது உடல்நலமின்றி கொடுந்துன்பத்தை அனுபவித்து வருவது பெரும் மனவலியைத் தருகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஐயாவின் உயிர்காக்கும் மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ளத் தேவையான பொருளாதாரமின்றிச் சிரமப்படும் அவரது குடும்பத்தினருக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் உற்றத்துணையாக இருப்பது மிக அவசியம். ஐயா அவர்கள் முழுமையாக உடல்நலம் பெற்று மீண்டு தமிழ்த்தேசிய அரசியல் பணியில் நம்மோடு இணைந்து நிற்க வேண்டும் என விழையும் அதே வேளையில், அவரது மருத்துவச் செலவுகளுக்கான பொருளாதாரத்தை உறுதிசெய்ய வேண்டியது இனமானத் தமிழர் ஒவ்வொருவரது கடமையாகிறது. ஆகவே, அவரது உயிர்க்காப்பு நடவடிக்கைக்கான பெரும்பணியாக இனமாகவும், பணமாகவும் உதவ வேண்டும் என அன்பு உறவுகளிடத்தில் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.

– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

வங்கி கணக்கு விவரம்:
மு.சாந்தி (M. Shanthi)
கணக்கு எண்: 33178327510
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank Of India)
பாடியநல்லூர் கிளை (Padiyanallur Branch)
IFSC: SBIN0014160