முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர்…

1

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர் என் அன்பிற்குரிய சகோதரர் முருகேசன் அவர்கள் உயிரிழந்தார் எனும் துயரச்செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

நாட்டைக் காக்கும் பாதுகாப்பு படைவீரராக பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர், மண்ணையும் மக்களையும் காப்பாற்றும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் பாசறையில் பொறுப்பேற்று துடிப்புடன் களப்பணியாற்றிய சகோதரர் முருகேசன் அவர்களை இழந்திருப்பது பேரிழப்பு.

சகோதரர் முருகேசன் அவர்களை இழந்து வாடுகின்ற அவர்தம் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், எமது நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரர் முருகேசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநான் பெருமைக்காகச் சொல்லவில்லை என்று ஆரம்பித்தால், தங்கள் பெருமையைத் தவிர…
அடுத்த செய்திவேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!