முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நான் பெருமைக்காகச் சொல்லவில்லை என்று ஆரம்பித்தால், தங்கள் பெருமையைத் தவிர…

0

நான் பெருமைக்காகச் சொல்லவில்லை என்று ஆரம்பித்தால், தங்கள் பெருமையைத் தவிர எதுவும் பேசமாட்டார்கள்..!

நல்லொழுக்கத்தைவிட மேலான பொருள் எதையும், தந்தை மகனுக்குத் தர முடியாது. கடமை உங்கள் வாசல் கதவைத் தட்டும்போது உள்ளே அழையுங்கள்; காக்க வைத்தீர்களானால், அது புறப்பட்டுபோய் இன்னும் ஏழு கடமைகளை அழைத்துக்கொண்டு வந்துவிடும்..!
– எட்வின் மார்க்கர்

தன்னம்பிக்கையே வீரத்தின் சாரம்..!
– எமர்சன்

நாம் நம்பிக்கை கொண்டுள்ள சிந்தனைகளின் தரம் எப்படிப்பட்டது என்பதை நம் செயல்களே வெளிப்படுத்துகின்றன; நல்லவைகளையே சிந்தித்து, அதையே செய்து முடியுங்கள்!
– சுவாமி சிவானந்தா

மனித மனத்தில் நல்ல, துணிவு மிக்க, உயர்ந்த சிந்தனைகளையே பயிரிடுங்கள்; அவற்றுக்கேற்ப வெற்றிக்கனிகள் கிடைக்கும்!
– வால்டேக்

ஆற்றல் படைத்தவர்களுக்கே இவ்வுலகம் உரிமை; தொடர்ந்து செயல்பட்டால், நீங்கள் விரும்பியதை, விரும்பியபடி, நேர்வழியிலேயே பெற வழி பிறக்கும்; அதற்கான ஆற்றலை, தொடர்ந்து செயல்படுவதன் மூலமே ஒவ்வொருவரும் பெறமுடியும்!
– எமர்சன்

நன்றி விசுவாசத்துடன் இருங்கள், செயல்படுங்கள்; வெற்றி உங்களைத் தேடி வரும்! – ஆபிரகாம் லிங்கன்

கடமையைச் செய்து, மௌனமாய் இருப்பதே அவதூறுக்கு சரியான பதில்! –
ஜார்ஜ் வாஷிங்டன்

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும்…
அடுத்த செய்திதிருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறை இணைச் செயலாளர்…