முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – பவானி…

1

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – பவானி தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்பு சகோதரர் அ.மாணிக்கம் அவர்களின் தாயார் அம்மா அ.நல்லம்மாள் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் அன்பு சகோதரர் மாணிக்கம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா நல்லம்மாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஇராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திஐயோ! மழையோடு வாழாத  வாழ்வென்ன வாழ்வோ? மழையை யாரிங்கே  மழையாய் பார்த்தது..? -…