முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…

1

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் சிறுதலை கிளைச்செயலாளர் அன்புத்தம்பி விஜயகுமார் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி விஜயகுமார் அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.

தம்பி விஜயகுமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி விஜயகுமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநான்காம் தமிழ்ச்சங்கம் கண்ட வள்ளல்! நமது ஐயா பாண்டித்துரை தேவர்…
அடுத்த செய்திஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – பவானி…