முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின்…

2

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் தியாகராஜநகர் வட்டச் செயலாளர் அன்புத்தம்பி சுரேஷ்குமார் அவர்களின் அன்புமகள் அணு அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

உயிரினும் மேலாக நேசித்து, பாராட்டி சீராட்டி வளர்த்த அன்பு மகளை சிறு வயதிலேயே பறிகொடுப்பது என்பது எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். பாசமிகு மகளை இழந்து தவிக்கும் அன்புத்தம்பி சுரேஷ்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அன்புமகள் அணு அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஎதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம்
அடுத்த செய்திவணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு…