எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதா? – சீமான் கண்டனம்

75

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதா?
– சீமான் கண்டனம்

நாடாளுமன்றத்திற்குள் இருவர் அத்துமீறி நுழைந்து, புகைக்குண்டுகளை வீசிய விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. புகைக்குண்டுகளை வீசிய இருவருக்கும் பார்வையாளர் அனுமதி வாங்கிக் கொடுத்த பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவை இடைநீக்கம் செய்யாமல், நியாயமானக் கோரிக்கையை எழுப்பிய எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது அப்பட்டமான சனநாயகப் படுகொலையாகும்.

நாடாளுமன்றத்திற்குள்ளேயே இருக்கும் இத்தகையப் பாதுகாப்புக் குறைபாட்டு நிலையும், நடந்த அந்நிகழ்வும், உலகரங்கில் சந்திச் சிரித்து நிற்கிற வேளையில், நாட்டையாளும் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுவரை வாய்திறக்காதிருப்பது வெட்கக்கேடானது. அதுகுறித்து விவாதிக்கக் கோரிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை என்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும். அதற்கு எனது வன்மையான எதிர்ப்புணர்வைப் பதிவுசெய்கிறேன்.

Suspending 15 MPs is the Height of Authoritarianism!

The suspension of 15 MPs from various opposition parties for the entire winter session who demanded a discussion on the issue of two persons who intruded into Parliament and threw smoke bombs is highly condemnable. Not suspending BJP MP Pratap Simha, who gave visitors’ passes to the intruders who hurled smoke bombs, but acting against MPs of opposition parties who raised a legitimate demand is a blatant murder of democracy.

It is a matter of shame for the country. Prime Minister Narendra Modi and Union Home Minister Amit Shah have been keeping their mouths shut at a time when there is such a security lapse within Parliament and the world is laughing at India. The action against opposition members who demanded a discussion on it is the height of authoritarianism. I record my strong opposition to it.

முந்தைய செய்திதென்காசி மாவட்டம், பாட்டாக்குறிச்சி வனப்பகுதியை அழித்து விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியினை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திவணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்