செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேலமையூர் ஊராட்சி செயலாளர் அன்புத்தம்பி அ.பிரகாஷ் – பாரதி இணையரின் அன்புமகள் மழலை ஹர்ஷா அவர்கள் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த செய்தியறிந்து பெரும் துயருற்றேன்.
பெற்றெடுத்து, பாராட்டி சீராட்டி போற்றி வளர்த்த செல்வமகளை சிறுவயதிலேயே பறிகொடுப்பது என்பது எவராலும் தாங்கவொண்ணா கொடுந்துயரம்.
அன்புமகள் ஹர்ஷாவை இழந்து தவிக்கும் அன்புத்தம்பி பிரகாஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புமகள் ஹர்ஷா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


