முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சௌதி அரேபியா – செந்தமிழர் பாசறை ஹயில் மண்டலத்தின் முன்னாள்…

0

சௌதி அரேபியா – செந்தமிழர் பாசறை ஹயில் மண்டலத்தின் முன்னாள் தலைவரும், நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை நகரச் செயலாளருமான அன்புத்தம்பி கண்டாங்கிபட்டி இரவி அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும் மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான, நாம் தமிழர் கட்சியில் இணைந்து, களப்பணியாற்றிவந்த தம்பி இரவி அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி கண்டாங்கிபட்டி இரவி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேலமையூர் ஊராட்சி…
அடுத்த செய்திஅடிமை இந்தியாவின் விடுதலைக்காக 7 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தப் பெருந்தியாகி; …