முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

வரலாறு காணாத தொடர் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்து உள்ள…

1

வரலாறு காணாத தொடர் கனமழை பெருவெள்ளத்தால் பேரிழப்பைச் சந்தித்து உள்ள தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற தென்மாவட்டங்களில் முதற்கட்டமாக, பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, துயருற்றுள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி, நாம் தமிழர் கட்சி சார்பாக சேகரிக்கப்பட்ட துயர் துடைப்புப் பொருட்களையும், உதவிகளையும் வழங்கினோம்.

இன்றளவும் எவ்விதத் துயர் துடைப்பு உதவிகளும் சென்றடையாத பகுதிகளுக்கு நேரில் சென்று, நம் மக்களுக்கு நம்மால் இயன்ற துயர் துடைப்புப் பொருட்களை வழங்கிட மீண்டும் நாளை (26-12-2023) தூத்துக்குடி செல்லவிருக்கிறேன்.

எனவே, அன்பிற்கினிய தம்பி-தங்கைகள், பேரன்பிற்குரிய உறவுகள் அனைவரும் என்னுடன் இணைந்து துயர் துடைப்புப் பணிகளில் பங்கெடுக்க வருமாறு பேரழைப்பு விடுக்கிறேன்.

முந்தைய செய்திஏழை மக்களுக்கான மருத்துவ சேவை தடைப்படாமலிருக்க அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள…
அடுத்த செய்திசெங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மேலமையூர் ஊராட்சி…