சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி, தம் கடும் உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில் வெற்றிநாயகனாக மிளர்ந்த சாண்டோ சின்னப்பத்தேவர் என்றழைக்கப்பட்ட மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று!
ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து, குடும்பத்தின் வறியச் சூழலால் இரும்பு அடிக்கும் பணிபுரிந்த போதிலும், ஜெர்மானிய உடற்கலைவல்லுநர் ’யூஜின் சாண்டோ’ மீது கொண்ட அளப்பரிய ஈர்ப்பால், அயராது முயன்று, தானும் ஒரு உடற்கலை வல்லுநரானதோடு, தன்பெயரின் முன்னாலும் சாண்டோ என்ற அடைமொழியைச் சேர்த்துக்கொண்டவர்!
பரம்பரை செல்வந்தர்கள் மட்டுமே கோலோச்சிய தமிழ்த்திரைத்துறையில் பாமரனும் படம் எடுத்து சாதிக்க வைக்க முடியும் என்பதை தன்னுடைய தேவர் பிலிம்ஸ் மூலம் நிரூபித்த கலைமேதை!
இந்திய அளவில் புகழ் உச்சியில் இருந்த நடிகர்களையெல்லாம் தம் நேரந்தவறாமை எனும் கட்டளைக்குள் கட்டுப்படவைத்த திறமையான நிர்வாகி!
தன் படத்திற்காக உழைக்கும் துணைநடிகர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை தொழிலாளர்களின் வியர்வைக் காய்வதற்குள் உரிய நேரத்தில் ஊதியம் கொடுத்த உத்தமர்!
ஆறறிவு மனிதர்களை மட்டுமல்ல ஐந்தறிவு விலங்குகளை நடிக்க வைத்தும் வெற்றிப்படங்களை வெளியிட முடியும் என்பதைச் செய்து காட்டிய சாதனையாளர்!
திரைக்கலை மீதான காதலால், தன்னிகரில்லா தயாரிப்பாளராக உயர்ந்து, காலத்தால் அழியாத காவியப்படைப்புகளைத் தந்த கலைத்தாயின் தலைமகன் நமது ஐயா சாண்டோ சின்னப்பத்தேவரின் நினைவைப்போற்றுவோம்!
நாம் தமிழர்!



