நாம் தமிழர் கட்சி – கொளத்தூர் தொகுதியின் மேற்கு பகுதித் தலைவர் அன்பு சகோதரர் மைக்கேல் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த சகோதரர் மைக்கேல் அவர்கள் மறைந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.
ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் சகோதரரின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
சகோதரர் மைக்கேல் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


