முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! இயன்முறை மருத்துவத் துறையில் பெருந்தொண்டாற்றி,…

0

இயன்முறை மருத்துவர் நாள்
நல்வாழ்த்துகள்!

இயன்முறை மருத்துவத் துறையில் பெருந்தொண்டாற்றி,
உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்களின் உடலியக்கத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து, உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவுகூர்வோம்!

அதேநேரத்தில், மருத்துவத் துறையில் தங்கள் உரிமைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் இயன்முறை மருத்துவர்களுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் வழங்கப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது.

சென்ற ஆண்டு, துணை மருத்துவத் துறை சார்ந்த ஆணையம் அமைப்பது பற்றி, தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில் இயன்முறை மருத்துவர்களை தொழில்நுட்ப வல்லுநர்கள் (Technician) என்று வகைப்படுத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக, இயன்முறை மருத்துவர்களின் கோரிக்கைகளை அங்கீகரித்து, தனி ஆணையம் (Physiotherapy Council) அமைத்து, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது நம் கடமையாகும்.

வாதம் என்னும் விலங்கை உடைத்து,
முடியாது எனும் எண்ணம் தகர்த்து,
மருந்தில்லா மருத்துவம் செய்யும் மந்திரக்காரர்களுக்கு அன்பு நிறைந்த இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்!

முந்தைய செய்திசிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி, தம் கடும் உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில்…
அடுத்த செய்திஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன்…