மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து வரும் இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மக்கள் தலைவர்!
நாட்டின் விடுதலைக்காக ஏழு ஆண்டுகாலம் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்த விடுதலைப்போராட்டப் பெருவீரர்!
தனது வாழ்வை மக்களுக்காக அர்ப்பணித்து, வாழ்நாள் முழுமைக்குமாகப் பொது நோக்கத்துக்காக உழைத்து வரும் மகத்தான போராளி!
பொதுவுடைமைத்தத்துவத்தை ஏற்று, விளிம்பு நிலை மக்களின் உயர்வுக்காகவும், மேம்பாட்டுக்காகவும் போராடி வரும் பெருந்தமிழர்!
தனது வாய்மொழிக்கும், வாழ்நிலைக்கும் துளியும் வேறுபாடில்லா எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அப்பழுக்கற்ற பெருந்தகை!
நேர்மையையும், உண்மையையும் தனது வாழ்வியல் நெறிகளாக ஏற்று, எங்களைப் போன்ற பிள்ளைகளுக்கு முன்னத்திஏராகவும், வழிகாட்டியாகவும் திகழும் தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற பேராளுமை!
பெருமதிப்பிற்குரிய எங்கள் ஐயா நல்லக்கண்ணு அவர்களின் நூறாவது பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறோம்; வாழ்த்தி மகிழ்கிறோம்.
ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!



