முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எப்போதும் எனது தோளுக்குத் துணையாய் நிற்கும்…

0

தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் எப்போதும் எனது தோளுக்குத் துணையாய் நிற்கும் என்னுயிர் தம்பிகள் நாம் தமிழர் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் சே.பாக்கியராசன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ஆகியோரின் தாய் மாமாவும், அன்பு இளவல் தமிழீழம் அவர்களின் தந்தையும், ‘சுயமரியாதைச்சுடர்’ ஐயா சிவகங்கை இராமச்சந்திரன் அவர்களுடைய பேரனும், ‘தனித்தமிழர் சேனை’ ஐயா நகைமுகன் அவர்களுடைய தம்பியும், தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், 'உறவுக்குரல்' பத்திரிக்கையின் ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய ஐயா தி.அரப்பா தமிழன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரும் அடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் தம்பிகளுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், தமிழ்த்தேசிய சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம், தமிழீழம் எனப் பன்னெடுங்காலமாகக் களத்தில் நின்ற ஐயா அரப்பா தமிழன் அவர்களது இழப்பு ஈடு இணையற்றதாகும். பொது நோக்கத்துக்காக உழைத்த ஐயாவின் இலட்சியக் கனவை நிறைவேற்றவும், அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும் இந்நாளில் உறுதியேற்கிறோம்.

ஐயா அரப்பா தமிழன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பூண்டி…
அடுத்த செய்திமண்ணுக்காகவும், மக்களுக்காகவும் வாழ்ந்து வரும் இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற மக்கள் தலைவர்!…