பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம்…

0

பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் வெற்றிபெற்ற எனதன்பு தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்வில் தோல்வியுற்ற தம்பி, தங்கைகளும் சிறிதும் மனந்தளர வேண்டாம்!

தோல்விதான் வெற்றியின் தாய்!

தோல்வி என்பது தோல்வியல்ல; அது வெற்றிக்கான முதற்படி!

இன்று தோல்வி வந்தடைந்த உன்னிடம்,
நாளை வெற்றி வந்தடையாமல் இருக்கப்போவதில்லை!

தோல்விகளால் உன்னை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது; நீ முயற்சிக்க தோற்காத வரை!

உலகில் வெற்றியின் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் அனைவரும் தோல்வியின் தழும்புகள் தாங்கியவர்கள்தான்!

ஆகவே, என் அருமை தம்பி, தங்கைகள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல் மீண்டும் முயற்சியுங்கள். உறுதியாக வெற்றிப் பெறுவீர்கள்!

முந்தைய செய்தி‘நீட் தேர்வு’ மாணவியிடம் உள்ளாடையைக் கழட்டிவிட்டு, தேர்வு எழுதுமாறு கட்டாயப்படுத்தியது…
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்