புலம்பெயர்ந்து பாலைவன தேசமான குவைத் நாட்டில் பணிபுரிந்த போதிலும் தாய்த்தமிழ்…

0

புலம்பெயர்ந்து பாலைவன தேசமான குவைத் நாட்டில் பணிபுரிந்த போதிலும் தாய்த்தமிழ் மீது கொண்ட அளவற்ற பெரும்பற்றினால் தமிழறிஞர்கள் பலரை வளைகுடா நாடுகளுக்கு வரவழைத்து தமிழ் வளர்த்த பெருந்தகை. என் மீது மிகுந்த அன்பு கொண்டு நேசித்த ஐயா செம்பொன் மாரி சேது அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஐயா அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், வளைகுடா நண்பர்களுக்கும், தமிழ்ப் பற்றாளர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா செம்பொன்மாரி சேது அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமதுரவாயல் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புள்ளலூர்…