நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக…

0

நம்முடைய பிரச்சினையே வயிறுதான்; சிலருக்கு நிறைத்தாக வேண்டும்; சிலருக்கு குறைத்தாக வேண்டும்!

காற்றும் இசையாகும் வாசித்தால்; சொற்களும் கவிதையாகும் யோசித்தால்; உலகமே நட்பாகும் நேசித்தால்!

உண்மையான நல்ல மனிதர்களை ஏன் பார்க்க முடியவில்லை? எல்லோரும் அந்த வேசத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

நீண்ட காலம் வாழவேண்டும் என்பது பலரின் ஆசை; ஆனால் பலருக்கும் பயன்படுமாறு வாழ நினைப்பவர் மிகச்சிலரே! .

‘புல்லாங்குழல்’ பழையதாக இருந்தாலும் அதிலிருந்து புதிய இசை நிச்சயமாகத் தோன்றும்; முதுமையும் அதுபோலத்தான்!

ஒருவன் கெட்டவன் என்று சொன்னால் உடனே நம்பிவிடுகிறார்கள்; ஆனால் நல்லவன் என்று சொன்னால் நிரூபிக்க வேண்டி இருக்கிறது!

கடைசியில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புங்கள்; சரியாகவில்லை என்றால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்!

முந்தைய செய்திதமிழர்களுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் உரத்துக் குரலெழுப்பி, தமிழ்த்தேசியக் களத்தில் சமரசமின்றி…
அடுத்த செய்திவிழ விழ எழுவோம் – விழுப்புரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் | சீமான் எழுச்சியுரை