நாம் தமிழர் கட்சி – கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியின் மகளிர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத் தங்கை அந்தோணி கிளாரா மேரி அவர்களின் தாயார் அம்மா நட்சத்திர மேரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தங்கை அந்தோணி கிளாரா மேரி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்திற்கு ம், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா நட்சத்திர மேரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


