முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைக்கிற நாசகாரத் திட்டத்தைக் கைவிடக்கோரி, மண்ணின் மக்கள்…

0

டங்ஸ்டன் கனிமச்சுரங்கம் அமைக்கிற நாசகாரத் திட்டத்தைக் கைவிடக்கோரி, மண்ணின் மக்கள் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுகூடி மதுரையில் பேரணியாய் அணிதிரண்டிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

மண்ணின் வளத்தைச் சுரண்டும் திட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகக் கூடியிருப்பது போற்றத்தக்கது. மக்களின் மகத்தான இந்தப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.

நம்மை மீறி எவராலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற உறுதியை அளிக்கிறேன்.

தாய் நிலத்தைக் காக்க நடக்கும் மண்ணுரிமைப்போராட்டத்தில் பங்கேற்று இருக்கும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துகள்!

மக்களின் திரட்சியே மாற்றத்திற்கான புரட்சி!

மண்ணைக் காக்க நடக்கும்
போராட்டம் வெல்க!
மக்களின் பேரெழுச்சி ஓங்குக!

முந்தைய செய்திஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள்…
அடுத்த செய்திஆளும் திமுக அரசின் அழுத்தத்துக்கும், அச்சுறுத்தலுக்கும் அடிபணிந்து தென்னிந்தியப் பதிப்பாளர்கள் சங்கம் ஒரு பக்கச் சார்போடு செயல்படுவதா? – சீமான் கண்டனம்