முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு…

0

கடந்த காலங்களில் தவறாக கட்டமைக்கப்பட்ட இந்திய நாட்டின் பிழையான வெளியுறவு கொள்கை மாறுவதற்கான சூழ்நிலை பிறக்க தாயக தமிழகத்தின் அதிகார அரசியலில் பெரும் மாற்றம் நிகழ வேண்டும். சாதியாலும், மதத்தாலும் பிரிந்து கிடக்கிற தாயகத் தமிழகத்தின் மக்களை ஓர்மைப்படுத்தி, தமிழர்களாக அணிதிரட்டி பெரும் அரசியல் புரட்சி இந்த மண்ணில் நடந்து அதிகாரத்தை தமிழர்களாகிய நாம் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தமிழர் என ஒவ்வொரு வீதியிலும் இளைஞர்களும் இளம் பெண்களும் ‌இன்று தாயகத் தமிழகத்தில் திரளத் தொடங்கியிருக்கிறார்கள்.
இது தமிழின விடுதலை வரலாற்றில் இதுவரை ஏற்படாத மிக முக்கியமான ஒரு அரசியல் நகர்வாகும்.

அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆண்டும் ரத்தமும் பெரும் வலியும் தோய்ந்த நினைவுகளைக் கொண்ட மே 18 இனப்படுகொலை நாளினை ஒன்று சேர்ந்து அழுதுவிட்டு கலைகிற நாளாக அல்லாமல், இமையோரம் கசிகிற விழிநீரைத் துடைத்துவிட்டு, கைகோர்த்து இனத்தின் விடுதலைக்காக ஒன்று சேர்ந்து எழுவதற்கான நாளாக, மாற்றிப் படைக்கவே தாய்த்தமிழ் உறவுகளை ஒன்றுகூட்டி ‘தமிழினப் பேரெழுச்சி நாளாக’ நாம் தமிழர் கட்சி கடைப்பிடித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் மே 18 இனப்படுகொலை நாள்
பொதுக்கூட்டம் கோவை கொடிசியா திடலில் மிகப்பெரிய திட்டமிடலுடன்,
மிகப்பிரம்மாண்டமாக உணர்வெழுச்சியோடு நடைபெறவுள்ளது.

நாளை நடைபெற உள்ள 2025 மே 18 தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் இனமழிக்கப்பட்ட வலிதோய்ந்த நினைவுகளையும், ஈழத்தாயக விடுதலை வேட்கையையும், நெஞ்சில் சுமந்து நிற்கும் எம் தாய்த் தமிழ் உறவுகள் ஒவ்வொருவரும் உணர்வெழுச்சியுடன் மறக்காமல் பங்கேற்க வேண்டியது வரலாற்று பெருங்கடமையாகும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகள் காலநிலை முன்னறிவிப்பில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுவதால் அனைவரும் மாற்று உடை, மழைக்கால உடைகள், தொப்பி, அலைபேசிகள் மழையில் நனையாமல் பாதுகாக்க நெகிழி அல்லது நீர் புகா பைகள், துண்டு போன்றவற்றை மறவாமல் உடன் எடுத்து வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மானத்தமிழர்கள் ஒவ்வொருவரும் பெரும் படையுடன் திரண்டு வாருங்கள்; மறவாமல் குடையுடனும் வாருங்கள்!

என் பேரன்பிற்குரிய தம்பி தங்கைகள், பெருமதிப்பிற்குரிய பெற்றோர்கள்,
என் உயிருக்கு இனிப்பான தாய்த்தமிழ் உறவுகள் என
உங்கள் ஒவ்வொருவரின் வருகையையும் எதிர்நோக்கியுள்ளேன்!

நாளை கோவை கொடிசியா திடலில் நடைபெறவுள்ள
மே 18 தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டத்தில் சந்திப்போம்!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!
இனம் ஒன்றாவோம்! இலக்கை வென்றாவோம்!
நாம் தமிழர்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திபன்னாட்டு அரசியல் சூழல்களில் தமிழர்கள் மீது திட்டமிட்டு சிங்கள அரசால்…
அடுத்த செய்திஆண்ட பரம்பரை அடிமை ஆவதா? வீரத்தமிழினம் வீழ்ந்து போவதா? மானத்தமிழினம்…