அடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப் போவதாகக் கூறி சென்னை அனகாபுத்தூர் பகுதியில் 750 வீடுகளை இடித்து, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் அங்கு வசிக்கும் 3500க்கும் மேற்பட்ட மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முனையும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாகத் துணைநிற்கும் விதமாகவும் இன்று 21-05-2025 நேரில் சென்று, வாழ்வாதார உரிமைகளுக்காகப் போராடிவரும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன்.
https://t.co/ujxo1od3Mm
தமிழ்நாடு அரசு சென்னை அனகாபுத்தூர் பகுதியில் வாழ்ந்து வரும் பூர்வகுடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை உடனடியாக நிறுத்தி, அவர்களது வீடுகளை இடிக்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்றும், வீடுகள் இடிக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் வசிப்பிடங்களை விட்டு பூர்வகுடி மக்களைத் திட்டமிட்டு அப்புறப்படுத்தும் இதுபோன்ற கொடுங்கோன்மைச் செயல்கள், இனியும் தொடரக்கூடாதென்றும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin






