தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக, அதன் ஒருங்கிணைப்பாளா் பெருமதிப்பிற்குரிய ஐயா செ.நல்லசாமி அவர்கள் தலைமையில் 21.01.2025 அன்று நடைபெறவிருக்கும் தென்னை மரங்களில் இருந்து கள் இறக்கிச் சந்தைப்படுத்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளிப்பதோடு, போராட்டத்தில் பங்கேற்றுக் கோரிக்கைகள் வெல்ல தோள் கொடுத்துத் துணைநிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
பழந்தமிழர் வாழ்வியலின் ஒரு கூறாக விளங்கிய கள்ளிற்கு தமிழ்நாடு அரசு விதித்துள்ள தடையைத் தகர்த்து, கள் இறக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தொடர்ச்சியாகப் பல்வேறு அறப்போராட்டங்களை முன்னெடுத்துவரும் தமிழ்நாடு கள் இயக்கத்திற்கும், அதன் ஒருங்கிணைப்பாளா் பெருமதிப்பிற்குரிய ஐயா செ.நல்லசாமி அவர்களுக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!



