முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்

138

க.எண்: 2025050526

நாள்: 20.05.2025

அறிவிப்பு:

திரைப்பட இயக்குநரும், நடிகரும்,
சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான
இரா.நாகேந்திரன்
நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்தலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
வைகாசி 07 | 21-05-2025 மாலை 06 மணியளவில்

இடம்:
பசும்பொன் தேவர் மண்டபம்
அபிபுல்லா சாலை,
தி.நகர், சென்னை

 

அண்மையில் மறைவெய்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் அவர்களின் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ் வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று புகழ்வணக்க உரையாற்றவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅடையாறு ஆற்றின் கரையைப் பலப்படுத்தி அதனருகே நடைபாதைகளும் பூங்காக்களும் அமைக்கப்…
அடுத்த செய்திதமிழ்மொழி மீது மாறாப் பற்றும், தீராக் காதலும் கொண்டு தனித்தமிழிலிலேயே…