தலைமை அறிவிப்பு – வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் 1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வு

34

க.எண்: 2025050525

நாள்: 13.05.2025

அறிவிப்பு:

வீரமிகு எங்கள் பாட்டனார்
பெரும்பிடுகு முத்தரையர்
1350ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்வணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான் அவர்கள்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாள்:
வைகாசி 09 | 23-05-2025 காலை 10 மணியளவில்

இடம்:
திருச்சி – ஒத்தக்கடை

வீரமிகு எங்கள் பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, வருகின்ற 23-05-2025 காலை 10 மணியளவில் திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கு குடியுரிமை அளிக்கக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமும், மனவலியும் அளிக்கிறது! – சீமான் வேதனை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திரைப்பட இயக்குநரும், நடிகரும், சமூகச் செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளருமான இரா.நாகேந்திரன் நினைவுப் படத்திறப்பு மற்றும் புகழ்வணக்கம்