ஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர் பக்கம் நின்று உரிமைக்குரல் எழுப்பும் இன உணர்வும், மான உணர்வும் கொண்ட புரட்சித்தமிழன்!
அன்பிற்கினிய அண்ணன் சத்யராஜ் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
எதார்த்தமான நடிப்பினால் பாமர மக்களையும் எளிதில் கவரும் தங்களின் மகத்தான கலைத்திறன் மூலம் மேலும் பல திரைப்படைப்புகளை நல்கி மக்களை மகிழ்விக்கவும், இனத்திற்கான உரிமைக்குரலாக ஓங்கி ஒலிக்கவும் எனது அன்பும் வாழ்த்துகளும்!



