நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மண்டலம் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரும், ஆயுஷ் மருத்துவர்கள் நலச்சங்க தலைவருமான அன்புத்தம்பி மருத்துவர் கு.மோ.செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் தந்தை சேயாறு வள்ளல் கா.ஆ.மோகனம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி
செந்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா கா.ஆ.மோகனம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



