முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை…

0

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் இளவல் இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் தந்தையார்பேரன்பிற்குரிய அப்பா தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இனவிடுதலைக் களத்தில் என் தோளோடு தோளாகத் துணைநிற்கும் அன்புத்தம்பி கார்த்திக் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இப்பெருந்துயரத்தில் இருந்து என்ன சொல்லி தேற்றுவது என அறியாது தவிக்கிறேன்.

எதன்பொருட்டும் ஈடுசெய்யவியலாப் பேரிழப்பால் வாடும்அன்புத்தம்பி கார்த்திக் அவர்களுக்கும், உற்ற துணையை இழந்து வாடும் அம்மா விஜயகுமாரி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும்,நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அப்பா தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின்…
அடுத்த செய்திஇன்று 07.02.2024 சேலம் அமர்வு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர்…