முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின்…

0

நாம் தமிழர் கட்சி – தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையின் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி இரவிக்குமார் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும் மக்களுக்குமான உரிமை மீட்புக் களத்தில் தொடர்ச்சியாகப் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையின், தமிழ்ப் பழங்குடியினர் பாதுகாப்புப் பாசறையில் இணைந்து துடிப்புடன் செயற்பட்டுவந்த தம்பி இரவிக்குமார் அவர்கள் இன்று களப்பணியின்போதே உயிரிழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களில் ஒருவனாகப் பிறந்து, அந்த வலி அடுத்தத் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நேராதிருப்பதற்கும், பழங்குடி மக்களின் உரிமைகளை மீட்பதற்கும் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்குமான அரசியல் அதிகாரம் எளிய மக்களுக்கும் கிடைப்பது ஒன்றே தீர்வு என்பதை உணர்ந்து களப்பணியாற்றிவந்த தம்பி இரவிக்குமாரின் கனவை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அளிப்பதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான புகழ் வணக்கமாகும்.

தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி இரவிக்குமார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசிறப்பு முகாம் எனும் சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
அடுத்த செய்திதிருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை…