நாம் தமிழர் கட்சி – சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
மண்ணையும், மக்களையும் உயிராய் நேசித்து, அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தன்னை இணைத்துக்கொண்டு, இளைஞர் பாசறையில் களப்பணியாற்றிவந்த பழ.வெற்றிநிலவன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.
தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்புத்தம்பி பழ.வெற்றிநிலவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



