முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான…

0

தமிழ்த்திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான பெருமதிப்பிற்கும், பேரன்பிற்கும் உரிய அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் வாகன விபத்தில் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். ஆருயிர் தந்தையின் மறைவால் பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பிகள் ஜீவா, ரமேஷ் ஆகியோருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினைப் பகிர்ந்துகொள்கிறேன்.

என்னுடைய திரைத்துறை பயணத்தில் என் மீது பெரும் நம்பிக்கை கொண்டு, அன்பும், அக்கறையும் பாராட்டியவர் அப்பா சௌத்ரி அவர்கள். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பற்பல வெற்றிப்படங்களை தயாரித்த அப்பா ஆர்.பி.சௌத்ரி அவர்கள் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பும், வாழ்க்கையுமளித்து, புதிய படைப்பாளிகளைத் திரைத்துறைக்குத் தந்தப் பெருந்தகை ஆவார். மக்கள் குடும்பம் குடும்பமாகத் திரையரங்குக்குப் படையெடுக்கும் வகையில், காலத்தால் அழியாத ஆகச்சிறந்தப் படைப்புகளைக் கொடுத்த அவரது மறைவு கலைத்துறைக்கு ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

அப்பா சௌத்ரி அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஅண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி…