நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை சுமதி சீனிவாசன் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா முத்து கோதண்டராமன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கை சுமதி சீனிவாசன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா முத்து கோதண்டராமன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


