தலைமை அறிவிப்பு – மகேந்திர கிரி மலையில் வனமேய்ச்சல் உரிமையை மீட்க, மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் செந்தமிழன் சீமான்

29

க.எண்: 2025110981
நாள்: 19.11.2025

மகேந்திர கிரி மலையில் வனமேய்ச்சல் உரிமையை மீட்க, நாம் தமிழர் கட்சி சார்பாக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 22-11-2025 அன்று காலை 11 மணியளவில் திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் மற்றும் வன உரிமைச்சட்டம் 2006 இன் படி அமைக்கப்பட்ட வன உரிமை கிராம சபை அறிவிப்பு பதாகை திறப்பு நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் மற்றும் வன உரிமைச்சட்டம் 2006இன் படி அமைக்கப்பட்ட வன உரிமை கிராமசபை அறிவிப்பு பதாகை திறப்பு நிகழ்வு தலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி
நாள்: கார்த்திகை 06 | 22-11-2025 காலை 11 மணியளவில்
இடம்: பணகுடி (திருநெல்வேலி மாவட்டம்)
இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் கிளைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை