தலைமை அறிவிப்பு – 03-07-2025 அன்று மாலை 04 மணிக்கு திருபுவனம் சந்தை திடல் அருகில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்

35

க.எண்: 2025070643அ

நாள்: 01.07.2025

அறிவிப்பு:

காவல்துறை விசாரணையின் போது படுகொலை செய்யப்பட்ட திருபுவனம் அஜித்குமார் மரணத்திற்கு நீதி வேண்டியும்,
தொடரும் காவல்துறை விசாரணை மரணங்களைக் கண்டித்தும்
சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் நடத்தும்மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
நாள்:
ஆனி 19 | 03-07-2025 மாலை 04 மணி

இடம்:
சந்தை திடல்
திருபுவனம்

சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் அவர்களை திருபுவனம் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்று கொடூரமாகத் தாக்கியதில் உயிரிழந்தார். இப்படுகொலைக்கு நீதி வேண்டியும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் விசாரணையின் போது 24 பேர் மரணமடைந்துள்ளதைக் கண்டித்தும்
நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் வருகின்ற 03-07-2025 அன்று மாலை 04 மணிக்கு திருபுவனம் சந்தை திடல் அருகில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதமிழ்த்தேசியப் புரட்சியாளர் தாத்தா புலவர் கு.கலியபெருமாள், சமூகநீதிக்காவலர் தாத்தா வே.ஆனைமுத்து மற்றும் சமூகநீதிப்போராளி தாத்தா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு பெருவிழா!