நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, திக்கணங்கோடு ஊராட்சியைச் சேர்ந்த அன்புச் சொந்தங்கள் தனிஸ்லாஸ், மார்க்ரெட் மேரி, ஜோபர்ட், அமுதா, ஜோகனா, ஜோகான் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன் குடும்பத்துடன் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த அன்புச் சொந்தங்களை இழந்திருப்பது பெரும் துயரத்தைத் தருகிறது. சொந்தங்களை இழந்து வாடும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அன்பு உறவுகள் தனிஸ்லாஸ், மார்க்ரெட் மேரி, ஜோபர்ட், அமுதா, ஜோகனா, ஜோகான் ஆகியோருக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!



