தமிழ்நாடு பனையேறும் தொழிலாளர்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பில் ஐயா செ.நல்லசாமி அவர்களின் தலைமையில், கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் ‘கள் விடுதலை மாநாடு’ எனும் பெயரில் தை 08 (21-01-2025) அன்று காலை 10 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பூரிகுடிசையில் நடைபெற்றது.
இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று பனையேறும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.