பரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை

97

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4550 ஏக்கர் பரப்பளவில் புதிய வானூர்தி நிலையம் அமைப்பதற்காக, ஏகனாபுரம் உட்பட 13க்கும் மேற்பட்ட கிராமங்களில் 3250 ஏக்கர் விளைநிலங்களையும், 30க்கும் மேற்பட்ட நீர்நிலைகளையும், ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புகளையும் அழித்து, நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து, 300 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அம்மக்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாக துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, மக்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி, இத்திட்டத்தை நிறைவேற்ற முனையும் பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசையும், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசையும் கண்டித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் 10-06-2023 அன்று காஞ்சிபுரத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு: https://youtube.com/live/yczYHIIp5MQ

சீமான் கண்டனவுரை: https://youtu.be/FW50OSt9Qqk

முழு நிகழ்வு: https://youtube.com/live/87ISrtHF1D0?feature=share

இப்பொதுக்கூட்டத்தில் பரந்தூர் வானூர்தி நிலையத் திட்ட எதிர்ப்பு அறப்போராட்டம் குறித்த ஆவணக் குறும்படம் திரையிடப்பட்டது.