அறிவிப்பு: தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின் 75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்

276

க.எண்: 2023060239

நாள்: 08.06.2023

அறிவிப்பு:

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்களின்
75ஆவது பிறந்தநாள் பெருவிழாப் பொதுக்கூட்டம்
(சூன் 11, திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில்)

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களின் 75 அகவை நிறைவையொட்டி “பெ.மணியரசன் – 75 பெருவிழா” வை தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுக்கிறது. வருகின்ற 11-06-2023 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருச்சி – திருவெறும்பூர் கூத்தப்பார் சாலையிலுள்ள தாஸ் திருமண மண்டபத்திலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் திறந்தவெளியிலும் இவ்விழா நடைபெறவிருக்கின்றது.

கலை நிகழ்ச்சிகள், பாராட்டரங்கம், நூல் வெளியீடு, கவியரங்கம், “பெ.ம. – 75” ஆவணப்படம் திரையிடல், “தடம் மாறாத் தமிழ்த்தேசியம்” நூலறிமுகம், “தமிழ்த்தேசியம் இனி” – கருத்தரங்கம் மற்றும் நிறைவரங்கம் எனப் பல்வேறு நிகழ்வுகள் நாள் முழுவதும் நடைபெறவிருக்கின்றது.

அதனைத்தொடர்ந்து, மாலை 06 மணியளவில் திருவெறும்பூர் பேருந்து நிலையம் அருகில் திறந்தவெளியில் நடைபெறும் பெருவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கவிருக்கிறார்.

நேரலை இணைப்பு:

இப்பொதுக்கூட்டத்தில், கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப்பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி வீரக்ககலை பாசறை சார்பாக இலவச சிலம்ப பயிற்சி வகுப்பு
அடுத்த செய்திபரந்தூர் புதிய வானூர்தி நிலையத் திட்டத்தைக் கைவிடக்கோரி காஞ்சிபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை