முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பாமகவின் தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அன்புமகள்…

0

பாமகவின் தலைவர் ஐயா மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அன்புமகள் சங்கமித்ரா அன்புமணி அவர்கள் தயாரித்துள்ள ‘அலங்கு’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டிருக்கிற செய்தியறிந்து மகிழ்ந்தேன்.

அன்புத்தம்பி சக்திவேல் அவர்கள் இயக்கி, அன்புத்தம்பிகள் குணநிதி, காளி வெங்கட், செம்பன் வினோத் உள்ளிட்டவர்களின் நேர்த்தியான நடிப்பில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான பாசப்பிணைப்பினை மையக்கருவாகக் கொண்டு மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ‘அலங்கு’ படத்தின் உயிரோட்டமான முன்னோட்டக் காட்சிகள் திரைப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பைக் கூட்டுகிறது.

அலங்கு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

@rajinikanth @draramadoss @SangamAnbu @DirSPShakthivel @GUNANIDHI_DG @kaaliactor

முந்தைய செய்திஎளிய மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டையும் திரைமொழியில் பதியமிட்டு ஆவணப்படுத்தும் தலைசிறந்த…
அடுத்த செய்திசமூக அவலங்களைப் பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் திண்டுக்கல் மண்டலப்…