முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய…

2

நாம் தமிழர் கட்சியின் கோவை மண்டலச் செயலாளரும், என் உயிருக்கினிய தம்பியுமான அப்துல் வகாப் அவர்களின் பாசத்திற்குரிய தாயார் மும்தாஜ் அம்மையார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

கோவையில் தம்பி வகாப்பின் வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் வாயார வரவேற்று, மனதார வாழ்த்தும் அம்மாவின் பேரன்பு இனி காணக்கிடைக்காது என்றெண்ணும்போதே கண்களில் நீர் நிறைகிறது.

தமிழ்த்தேசியப் பேரினத்தின் அரசியல் விடுதலைக்குத் தலைச்சிறந்த போராளியை, என் தோளுக்குத் துணையாக நின்று களமாடும் போர்க்குணமிக்க அன்புத்தம்பியை ஈன்றளித்த பெருமைக்குரிய தாயின் இழப்பு பெருந்துயரைத் தருகிறது.

அன்புத்தாயின் மறைவு தம்பி வகாப்பிற்கு மட்டுமவல்லாது, தனிப்பட்ட முறையில் எனக்கும் பேரிழப்பாகும்.

பெற்றெடுத்து, பேணிவளர்த்த பேரன்புமிக்க தாயின் மறைவால் துயருற்றுள்ள தம்பி வகாப்பிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

பேரன்பிற்குரிய அம்மா மும்தாஜ் அம்மையார் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: ஏழும்பூர் தொகுதியல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!
அடுத்த செய்திமிக்ஜாம் புயல் துயர்துடைப்புப் பணி: சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமான் நிவாரண பொருட்கள் வழங்கினார்!