முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு…

1

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சியின் திருச்சி கிழக்கு தொகுதியின் செய்தித் தொடர்பாளர் அன்புத்தம்பி ஆ.ராசா அவர்களின் தாயார் அன்பிற்கினிய அம்மா ஆ.பஞ்சவர்ணம் அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ராசா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பஞ்சவர்ணம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திசென்னை பெருவெள்ளப் பேரழிவில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான எழும்பூர்…
அடுத்த செய்திதனது ஒப்பற்ற நடிப்புத்திறனாலும், தனித்துவமிக்க உடல்மொழியாலும், எவரையும் கவர்ந்திழுக்கும் நடை…