முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள். நீங்கள்…

0

உங்களை விட்டு விலகிச்செல்பவை, எதுவாகினும் மகிழ்ச்சியாக வழியனுப்பி வையுங்கள்.

நீங்கள் இழந்ததைவிடச் சிறந்ததைத் தர வாழ்க்கை காத்துக்கொண்டிருக்கிறது.

கடந்துபோன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் கிடையாது.

சமாதானமும், செல்வமும் அதிகமானால் கோழைகள் பெருகுவார்கள்.

கடின காலம்தான் வீரர்களைப் பெற்றெடுக்கும் அன்னை.

அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்.

பொதுவான சந்தர்ப்பங்களைக் கைப்பற்றிச் சிறந்ததாக மாற்றுங்கள்.

உணர்ச்சியுள்ள மனிதன் பிறரைத் திருத்துவதில் நேரத்தைச் செலவிடுகிறான்.

அறிவுள்ள மனிதனோ தன்னைத்தானே திருத்திக்கொள்வதில் கவனத்தைச் செலுத்துகிறான்.

வெற்றியைவிடத் தோல்விக்குப் பலம் அதிகம்.
வெற்றி சிரித்து மகிழ வைக்கும்.
தோல்வி சிந்தித்து வெல்ல வைக்கும்.

நமக்கு உதவியவர்கள் நன்றிக்குரியவர்கள்.
நமக்கு உதவாதவர்கள் நம் வெற்றிக்கு உரியவர்கள்.
என்றும் இதை மறந்துவிடக்கூடாது.

நிஜங்கள் தரும் மகிழ்ச்சியைவிட, நினைவுகள் தரும் மகிழ்ச்சி அதிகம். அதனால்தான், நிஜங்கள் நிலைப்பதில்லை, நினைவுகள் என்றும் அழிவதில்லை.

எதுவொன்றிற்கும் காத்திருப்பவனைக் கடந்துபோகும் உலகம்தான்,
தன் தேவையை உணர்ந்து தேடுபவனை வெற்றியாளனாக அறிவிக்கிறது.

பாதை இலகுவா, கடினமா என்று பார்க்காதீர்கள்.
நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்றுமட்டும் பாருங்கள்.
போகும் இடத்தை எளிதில் அடைந்துவிடலாம்.

முந்தைய செய்திவிழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின்…
அடுத்த செய்திவாழ்வில் தோல்விகள் அதிகம். வெற்றி குறைவு என வருந்தாதீர்கள். செடியில்…