திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி தொகுதி இணைச் செயலாளர் அன்புத்தம்பி ராஜீவ் ரத்தினகுமார் அவர்களின் தாயார் ஜெ.ஜெபக்கனி அவர்கள் மறைவுற்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி ராஜீவ் ரத்தினகுமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
அன்பு சகோதரி ஜெ.ஜெபக்கனி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


