முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி…

0

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – கோவை மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி கதிர் பிரபாகரன் அவர்களின் தாயார் அன்பிற்குரிய அம்மா பி.சுந்தராம்பாள் அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச் செய்தியறிந்து மனவேதனையடைந்தேன்.

பெற்றெடுத்து, போற்றி வளர்த்து ஆளாக்கிய பேரன்புமிக்க அன்னையின் இழப்பு எதன் பொருட்டும் ஈடுசெய்ய இயலாதது. தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி கதிர் பிரபாகரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.

அம்மா பி.சுந்தராம்பாள் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதிருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – நாங்குநேரி…
அடுத்த செய்திதெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள் – சீமான் பெருமிதம்