முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த மூத்த…

1

நாம் தமிழர் கட்சி – திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த மூத்த களப்பணியாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா கோ.இராசேந்திரன் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மொழி, இனம், மண் காக்கவும், மக்களின் நலன் காக்கவும், தமிழர் உரிமைகளை மீட்கவும் காக்கவும் அயராது போராடிவரும் மாபெரும் புரட்சிகர இயக்கமான நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பெரும்படையில் தன்னையும் இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றிவந்த ஐயா இராசேந்திரன் அவர்கள் மறைந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

ஈடுசெய்யவியலா பேரிழப்பினால் வாடும் ஐயாயின் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கோ.இராசேந்திரன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிண்டுக்கல் தொகுதி கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்